மாற்று விசாரணைக் கமிஷன்! ஷோபாசக்தியின் கதைகளைக் குறித்த அவதானிப்பு
01 சிதைக்கவே முடியாது என்னையும் என்னுடைய ஆன்மாவையும். அழிக்கும்தோறும் உயிர்ப்பேன். உயிர்ப்பே எனது விதி. நான் என்பது, நான் மட்டுமல்ல, என்னுடைய சனங்களின் துயரம். என்னுடைய சனங்கள் சிந்திய கண்ணீர்த்துளியினதும் ரத்தத்தினதும் ஆறாச் சூடு. நானென்பது, இழைக்கப்பட்ட அநீதியின் சாட்சி. நானென்பது, தேசாந்திரியாக அலையும் கதியற்ற அகதியின் முகம். நானென்பது சிலுவையேற்றம். நானென்பது உயிர்த்தெழுதல். நானென்பது அணையாத ஒளி. நானென்பது பெருமுழக்கம். ஷோபாசக்தியின்…
