கட்டுரைகள்

August 30, 2026· 6

செம்மணி அகழ்வுகள்: நீதிக்கான தேடலா அல்லது அரசியல் சடங்கா?

இலங்கையில் இரண்டு விதமான அகழ்வுப்பணிகள் நடக்கின்றன. ஒன்று, இலங்கை அரசு திட்டமிட்டுச் செயற்படுத்துகின்ற தொல்பொருள் அகழ்வுப் பணி. இது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை விரிவாக்குவதற்கும் நிலைப்படுத்துவதற்குமான ஏற்பாடு. வடக்குக் கிழக்கு மாகாணங்களில்தான் இந்தப் பணி மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. இது தேவையில்லாத ஒரு பிரச்சினையும் கூட. இரண்டாவது, மனித உரிமை மீறல்களோடு தொடர்புடையது. காணாமலாக்கப்பட்டு அல்லது அரசியல் முரண்பாடுகள் காரணமாகக் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் மனிதப்…

August 29, 2026· 5

குரலற்றவரின் குரல் – கோமகன்

ஈழத்தின் வடபுலத்தில் உள்ள இயக்கச்சி கிராமத்தில் பிறந்தவர் கருணாகரன். தற்பொழுது கிளிநொச்சியில் வசித்து வருகிறார். கவிஞராகவே ஈழத்து இலக்கியப்பரப்பில் அடையாளப்படுத்தப்பட்டவர். இருந்த போதிலும் ஒரு கதைசொல்லியாகவும், ஊடகவியலாளராகவும், தொடர் இலக்கியச்செ யற்பாட்டாளராகவும், பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றவராகவும் பொது வெளியில்வெளிப்படுத்திருக்கின்றார். இவர் “வெளிச்சம் ” கலை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் “காட்சி” ஊடகத்திலும் பணியாற்றியிருக்கிறார். 1980 களில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்ட கருணாகரன், விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்ற வேளையிலும், வீழ்ச்சி அடைந்த காலகட்டத்திலும் சமகாலத்தில் பயணித்த ஓர் போராளியாவார். இதுவரையில், “ஒரு…

April 30, 2026· 0

இயக்கச்சி படையினரின் ஆக்கிரமிப்பு நில மீட்பு போராட்டத்தில் கட்சி அரசியல்

இயக்கச்சியில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி நில உரிமையாளர்களும் அந்தப் பகுதி மக்களும்  போராட்டத்தை(2026.04.02) முன்னெடுத்திருந்தனர். இலங்கை இராணுவத்தின் 4வது படைப்பிரிவின் மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணி “முகாம் அமைத்திருக்கும் பொதுமக்களுக்கு உருத்துடைய காணிகளை” அளவீடு செய்து சுவீகரிப்பதற்கு முயற்சிக்கிறது. இதை எதிர்த்தே மக்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்துக்கு  ஆதரவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, சமத்துவக் கட்சி,…