உறைய முடியாக்காலம் சேரனின் கவிதைகள்
எழுதப்படும் காலத்திலும் அதற்குப் பிறகான காலவெளியிலும் உயிர்கொண்டிருக்கும் எழுத்துக்கு ஒளி அதிகம். அந்த ஒளி, அந்த எழுத்தையும் அதை எழுதிய எழுத்தாளரையும் அல்லது கவிஞரையும் காலநீட்சியில் உயிர்ப்போடு வைத்து விடுகிறது. வள்ளுவர், கம்பன், கபிலர், ஔவை, சேக்ஸ்பியர், ஷெல்லி, பாரதி, தாகூர், டோல்ஸ்ரோய், தஸ்தாயெவ்ஸ்கி, செகோவ், புதுமைப்பித்தன் எல்லோரும் இந்த வகையில் அமைந்தவர்களே. அவர்களுடைய எழுத்துகளும் அவ்வாறு அமையப்பெற்றவையே. சிந்தனையின் வீச்சும் ஆழ்மனதில்…
